Tuesday 6 October 2009

திருமாவளவனும் திசை மாறிவிட்டாரா?


திருமாவளவன் அண்மையில் இலண்டனில் புங்குடுதீவு நலன் புரிச்சங்கத்தின் நிகழ்வில் உரையாற்றினார். அவரது உரை சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை நீடித்தது. இலண்டனைப் பொறுத்தவரை இது ஒரு மிக நீண்ட உரை. ஆனாலும் மக்கள் சலிக்காமல் இருந்து செவிமடுத்தனர். உரையின் முடிவில் எழுந்து நின்று கைதட்டினர். எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி எழுந்திருக்கவில்லை. அவரிடம் ஏன் என்று வினவியபோது இவங்களால் எமக்கு எந்தப் பயனும் இல்லை என்றார். அவர் ஒன்றும் சாதாரணப் பெண்மணியுமல்ல. ஒரு மருத்துவர். தமிழ்த்தேசியப் போராட்டதில் அவரது குடும்பமே நீண்டகாலமாக ஈடுபட்டுவருகின்றது. ஆனாலும் ஈழத் தமிழர்களது போராட்டத்திற்கு நீண்டகாலமாக ஆதரவு கொடுத்துவரும் திருமாவைப் பற்றி - தமிழ்நாட்டின் தலித் மக்களிடம், வறிய மக்களிடம் ஈழப் போராட்டத்தை எடுத்துச் சென்ற திருமாவைப் பற்றி ஏன் இப்படிச் சொன்னார்? இது பற்றி சற்று விபரமாகத் தகவல் திரட்ட முயற்ச்சித்தேன்.

ஒரு நல்லவரைச் சந்தேகித்தல் துரோகிகளின் செயலிலும் கொடிது என்பதை யாவரும் அறிவோம்.

ஆனாலும் தோழர் திருமாவளவனுக்கும் இலண்டன் தமிழ்த்தேசிய வாதிகளுக்கும் இடையில் என்ன பிணக்கு?

திருமாவளவனில் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கும் படி ஒரு குறுந்தகவல் இலண்டனில் உலாவியது.

திருமாவளவனின் நிகழ்ச்சியில் தமிழ் இளையோர் அமைப்போ அல்லது பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்களோ பங்குபற்றவில்லை.

இலண்டனில் உள்ள தமிழ்த்தேசிய வாதிகள் திருமா இந்திரா காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் நின்றதை வரவேற்கவில்லை.
இலண்டனில் தோழர் திருமாவின் உரையிலும் அவர் ஜீடிவி எனும் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியிலும் சிலகருத்துக்கள் உள்ளடக்கப் பட்டிருந்தன:
  • இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திரா காங்கிரசு ஆட்சி செய்ததையே செய்திருக்கும்.
  • தமிழர்களுக்கு இந்தியா மட்டும் எதிரி இல்லை, சகல நாடுகளூமே எதிரி.
  • தோழர் திருமாவளவன் இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்ற பொருள்படப் பேசினார்.
  • எல்லா வற்றிலும் மேலாக, இலங்கையில் சீனா காலூன்றாமல் இருக்க இலங்கைக்கு இந்தியா உதவிவருகிறது. உங்களின் எதிரியான இலங்கைக்கு உதவுவதால் இந்தியாவை உங்கள் எதிரியாக எண்ணாதீர்கள் என்று சொன்னது பல தமிழின உணர்வாளர்களை ஆச்சரியப் பட வைத்தது.

தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழித்துக் கட்டுவதில் இலங்கையிலும் பார்க்க இந்தியாஅதிக முனைப்புக் காட்டியதை யாவரும் அறிவர்.

இந்தியாவிற்கு தமிழ்த்தேசிய போராட்டத்தை ஒழிக்க இலங்கை உதவியதாக பலரும் நம்புகின்றனர்.

இந்நிலையில் திருமா இப்படிக் கூறியது அவர் இந்திய உளவுத்துறையின் நிகழ்ச்சி நிரலில் அகப் பட்டு விட்டாரா என்ற சந்தேகத்தைச் சிலருக்கு உண்டாக்கியுள்ளது.

இது எங்க (இந்தியாவின்) ஏரியா உள்ளே வராதே!
இந்தியாவை விட்டால் உங்களுக்கு உதவயாரும் இல்லை என்ற கருத்தை தமிழருவி மணியனும் முன்வைத்தார். மே மாதம் 17-ம் திகதிக்கு முன்னர் பிரித்தானியாவுடன் இணந்து ஒரு கடற்படையை அனுப்பி போரில் அகப் பட்டுள்ள தமிழர்களைப் பாதுகாக்கத் தயார் என்று பிரான்ஸ் பகிரங்கமாக அறிவித்தது. ஆனால் இதைத் தடுத்தது யார் என்பதை திருமாவும் மணியனும் அறிந்திருப்பர்.

அமெரிக்கா திரைமறைவில் ஒரு கடற்படையை இலங்கை நோக்கி நகர்த்தியது அது எடுக்க இருந்த நடவடிக்கையைதிருமாவும் மணியனும் அறிந்திருப்பர்.

ஸ்கண்டிநேவிய நாடுகள் அரச மட்டத்தில் பல அழுத்தங்களைப் பிரயோகித்தன அதை எதிர்க்க இலங்கைக்கு பக்கபலமாக இருந்தது யார் என்பதை திருமாவும் மணியனும் அறிந்திருப்பர்.

இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு உதவ யாருமில்லையா?

இருந்தும் ஏன் இந்தப் பொய்?

இந்தியா தமிழனுக்கு உதவ யாரையும் விடவில்லை என்பதே உண்மை.

11 comments:

Suresh Kumar said...

இந்தியா தமிழனுக்கு உதவ யாரையும் விடவில்லை என்பதே உண்மை //////

Correct

Suresh Kumar said...

இந்தியா தமிழனுக்கு உதவ யாரையும் விடவில்லை என்பதே உண்மை //////

Correct

Anonymous said...

யாரைத்தான் நம்புவதோ????????

vanathy said...

திருமா திசை மாறிவிட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை.ஆனால் சமீபத்திய அவலங்களும் இழப்புகளும் பல தமிழர்களை அரசியல் முதிர்ச்சி உள்ளவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.அரசியல்வாதிகளை முழுமையாக நம்பி ஒருவிதமான அப்பாவித்தனத்துடன் செயல்பட்ட காலம் மாறி ,உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து எங்களுக்கு ஆதரவாக வீராவேசக் கருத்துகள் கூறியவுடன் கைதட்டி புளகாங்கிதம் அடைந்து வந்த பலர் இன்று கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கத் தொடக்கி விட்டார்கள். வரலாறும் கண் முன்னால் நடந்த இழப்புகளும் ஏமாற்றங்களும் எமக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டு இருக்கின்றன .
திருமாவின் பேச்சு ஆரம்பத்தில் கொஞ்சம் தெளிவாக இருந்து பின்பு ஒரே குழப்பமாக முடிந்தது .தமிழர்கள் தங்கள் அணுகுமுறையை மீளாய்வு செய்யவேண்டும் என்று கூறினார்,சரிதான் ,ஆனால் அதற்கு என்ன செய்யவேடும் என்பது பற்றிய தனது கருத்துக்களை சரியாக அவர் சொல்லவில்லை.
On the whole ,that speech wasn't very convincing,it didn't have the clarity or conviction,there was something lacking.

--வானதி

www.mdmkonline.com said...

தோழரே திருமா மற்றும் தமிழருவி மணியன் அவர்களின் முழு உரை கிடைக்குமா? அதை எங்களுக்கு அனுப்ப இயலுமா ?

Tholar
www.mdmkonline.com

Vel Tharma said...

Please visit following links:
http://www.youtube.com/results?search_query=veltharma&search_type=&aq=f
http://www.youtube.com/watch?v=pExJOZRWum0
http://www.youtube.com/watch?v=rY4gHEo8qOw
http://www.youtube.com/watch?v=nGwPdNYgpJw
http://www.youtube.com/watch?v=Nb3kwlx0hjo
http://www.youtube.com/watch?v=GONnI8dPjOk
http://www.youtube.com/watch?v=SwwC0kvkoVg
http://www.youtube.com/watch?v=J6_4t-ks5WU

Vel Tharma said...

I did not record the part where they attack their local political rivals

Anonymous said...

ilankai tamilanukku tham yarukkethiraga poradinarkal enpathe theriyathu,amerikavidam pissai kedkum pissaikararkal,vedkam kedda ivarkal thamathu thayaye pazhikkum thurokikal. england il irunthuviddal arivazhikal ena ennum kolaiveriyarkal.englandil pisssaikaranum english than pesukiran. edduppadippu karikkuthavathu,doctor kkum arasiyalukkum enna link???

Anonymous said...

திருமா சில சமயம் கலைஞ்சாரின் மார்கெடிங் மேனேஜர் போல செயற் படுகிறார். விகடனில் முதலில் பிரபாகரன் சொன்னார் என்று சொல்லிவிட்டு அடுத்த வாரம் ஒரு மறுப்பு விட்டார் பாருங்கள்.

௨. அவர் சொன்ன சைனா கதையில் உண்மை இருக்கலாம். சிங்களமும் சைனாவும் இணைந்து செயல்படும் பட்சத்தில் இந்தியா என்ன செய்யும்?. இந்தியா புலிகளுக்கு உதவி இருந்தால் அவர்களே சைனாவின் கனவை முடித்திருப்பார்கள். இப்போது இந்தியா தானே இலங்கையில் இறங்கிவிட்டது. ராஜ பக்சேவை இன்று போர் குற்றம் என்று மிரட்டலாம். நாளை ராஜ பக்ஸ் போய் வேறு அரசாங்கம் வந்தால் என்ன செய்வார்கள்? பிரேமதாசா செய்தது போல மீண்டும் இந்தியாவுக்கு கெட் அவுட் சொல்லலாமே !! அப்போது இந்தியா மீண்டும் போராளிகளை வளர்த்து விடும். ஈழஅத்தமிழஅர்களுக்கு இந்தியா தேவையோ இல்லையோ , இன்று இந்தியாவுக்குத்தான் ஈழஅத்தமிழார்கள் தேவை. ஈழஅத்தமிழஅர்களை காப்பாத்தியே தீருவேன் என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்து குந்திவிடும்.

இதற்கு பேசாமல் ஈழத் தமிழஅட்களும் சிங்களர்களும் ஆளுக்கு கொஞ்சம் திருந்தி ஒற்றுமை ஆகிடலாம். தீவிரவாதம், பேரினவாதத்தால் குரங்க்க்கு அப்பம் கதைதானே ஆனது. தமிழ்ர்களை போலவே சிங்களர்களும் ௩௦ வருடங்களில் அவதிப்பட்டிருப்பார்கள் .

எதற்கும் ஒரு முறை வளைகுடா போரின் முடிவில் அமெரிக்கா வந்து உதவி செய்யும் என்று நினைத்து சதாமுக்கு எதிராக கிளர்ச்சி செய்து செத்து போன பத்தாயிரம் இராக்கிய ஷியா மக்களின் கதையை யும் படித்து வையுங்கள்.

Anonymous said...

வெறும் குண்டு போடுவதுடன் ஒரு போர் முடிந்துவிடாது. அந்த மக்களை மன ரீதியாக அடக்கவும் வேண்டும். ஒரு வேலை திருமாவின் வேளை இப்படி வேப்பிலை அடிப்பதாகவும் இருக்கலாம்.
ஈழத்தமிழர் களுக்கு நண்பர்கள் யாரும் இல்லை என்பது பொய். எந்த நாட்டையும் நம்ப முடியாவிட்டாலும் , தமிழ்நாட்டு மக்களை நம்பலாம். சீமான் மூலம் அரசியல் ரீதியாக ஜனநாயகமாக இந்தியாவை நெருக்கியும் தமிழ் ஈழ்ம் பெறலாம். இது காங்கிரசின் மத்திய அரசின் ஆட்சி சுகத்திற்கும் , கருணாநிதிக்கும் அவருடைய பார்ப்பன நண்பர்களுக்கும் பிரச்சினையாகிவிடும் என்பதால் தான் இப்போது ஆளாளுக்கு குடியுரிமை தருகிறோம் அது இது என்று உளறி திசை திருப்புகிறார்கள். இப்போதைக்கு நம்ப கூடிய ஆள் சீமான் மட்டும்தான்.

உங்களுக்கு இருக்கும் தீர்வுகள்

௧. ஜனத்தொகையை பெருக்குவது

௨. இந்திய பார்ப்பன மைனாரிடி செய்வது போல ஊழல், பணம், மது, மாது அனைத்தையும் பயன்படுத்தி சிங்கள கருனாநிதிகளை உருவாக்கி மொத்த இலங்கையையும் ஆளலாம். சாத்தியமோ என்னவோ தெரியாது.

௩. சிங்கள மக்களுடன் ஒற்றுமையாகி நிம்மதியாக வாழ்வது.

௪. சீமான் போற வழி.

வேறு எதுவும் தெரியவில்லை.

Anonymous said...

சீமான், கொளத்தூர் மணி, போன்றவர்களை கைது செய்யும்போது திருமா, வைகோ, ராமதாஸ் இவர்கள் எல்லாம் ஏன் கைது செய்யப்படவில்லை ?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...