Saturday 15 October 2011

அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் தாக்குதல்.

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் உன்னத கருவிகளாகப் பாவிக்கப் பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள் கணனிக் கிருமிகளால்(வைரஸ்) பாதிப்படைந்திருந்தன. இப்போது அவை மீண்டும் தாக்குதல்களை நடாத்தியுள்ளன. பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அவை இரு வெற்றீகரமான தாக்குதல்களை நிறைவேற்றியுள்ளன.

பாக்கிஸ்த்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள ஆப்கான் எல்லை அண்டியுள்ள பிரதேசத்தில் இருந்த ஹக்கானி வலையமைப்பின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஆறுபேர் இன்று(15-10-2011) கொல்லப்பட்டனர்.  அங்கோர அத்தா என்னும் நகரில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் நடாத்திய ஏவுகணைத் தாக்குதல் மௌலவி நஜீர் என்பவரின் தலைமையில் இயங்கும் தீவிரவாதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடாத்தியது மௌலவி நஜீர் தலைமையில் இயங்கும் குழுவினர் பாக் அரசுடன் ஒரு உடன்பாட்டுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவர்கள் பாக் அரசுக்கு எதிராக எந்தத் தாக்குதல்களையும் மேற் கொள்ள மாட்டார்கள். பதிலாக பாக் அரசு அவர்களை சுதந்திரமாக இயங்க அனுமதித்துள்ளது.



 அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தொடர்பான முந்திய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்

இதே வேளை இன்று சனிக்கிழமை யேமனில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் அல் கெய்தா அமைப்பைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களுள் எகிப்தியரான இப்ராஹிம் அல் பன்னா என்ற அல் கெய்தாவின் முக்கியஸ்த்தர் ஒருவரும் அடக்கம். இவர் பன்னாட்டு ரீதியில் பல தாக்குதல்களுக்கு திட்டமிடுபவர்.

Friday 14 October 2011

கவிதை: தராசு ஒன்று இங்கு சிதைபட்டுக் கிடக்கிறது


செல்கின்ற இடம்
எதுவென்று தெரியவில்லை
செல்ல வேண்டிய இடமும்
எதுவென்று புரியவில்லை
வழிநடத்திச் செல்ல இங்கு
யாருமே இல்லை
வழிகாட்டி வந்தோரும்
வழிவிட்டுப் போயினர்
காக்கவென வந்தோர்
கழுத்தறுத்துப் போயினர்
உடன் வருபவர்களில்
வழிப்பறித் திருடர் யார்?
கால் வாரி விடுபவர் யார்?
பயங்கரமான வழி இது
புதிரான பயணம் இது
தராசு ஒன்று இங்கு
சிதைபட்டுக் கிடக்கிறது.


 தெரு விளக்காய் நின்று
திரு விளக்காய் போனவர்க்கு
ஒரு விளக்கேற்ற
ஏன் இத்தனை குளறுபடி?

Thursday 13 October 2011

நகைச்சுவை: மொழிபெயர்த்தெடுத்தவை



நெருங்கிய சொந்தங்களிலும் பார்க்க தூரத்துச் சொந்தங்கள் மேலானது. போக்கு வரத்துச் செலவு உயர்கின்றது. தொலைபேசிச் செலவு குறைகிறது.

வகுப்பில் எல்லாப் பாடங்களையும் ஒரு ஆசிரியரால் படிப்பிக்க முடியாமல் பல ஆசிரியர்கள் போதிக்கிறார்கள். எல்லாப் பாடங்களையும் ஒரு மாணவர் படிக்க வேண்டுமாம். என்ன கொடுமை இது?

மனைவியைத் திருப்திப் படுத்துவது எப்படி என்று கூகிளில் தேடினேன். பதில்: நாமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஆண்கள் தாங்கள் கண்ணால் பெண்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெண்கள் தம் காதால் ஆண்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால்தால் பெண்கள் அதிக அலங்காரம் செய்கிறார்கள். ஆண்கள் பொய் சொல்கிறார்கள்.
 


அவன் அவளுக்கு ஒரு ஏ-ஜோக் அனுப்பினான். அவளுக்கு அதைப் புரிந்து கொள்ள 5 நிமிடங்கள் எடுத்தன. பின்னர் 10 நிமிடங்கள் சிரித்தாள். பின்னர் தனது 15 நண்பர்களுக்கு அதை அனுப்பினாள். பின்னர் தனக்கு ஏ-ஜோக் அனுப்பிய நண்பனுக்கு பதில் அனுப்பினாள்: இந்த மாதிரி கெட்ட நகைச்சுவைகளை எனக்கு அனுப்ப வேண்டாம். இதுபோன்றவை எனக்குப் பிடிக்காது.

அந்தக் காலத்தில் பாடசாலை அதிபர் அறையில் மாணவர்கள் இருந்தால் மாணவர்கள் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்கள் என்று அர்த்தம். இப்போது பாடசாலை அதிபர் அறையில் மாணவர்கள் இருந்தால் அதிபர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்கள் என்று அர்த்தம்.

எனது மனைவியுடன் ஒரு பப்பில் மது அருந்திக் கொண்டிருக்கையில் I love you என்றேன். அப்போது என் மனைவி சொல்லுவது நீயா அல்லது நீ அருந்திய மதுவா என்று கேட்டாள். நான் சொன்ன பதில்: நான் எனது மதுக் கிண்ணத்துடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.

அவள்: மற்றப் பெண்களை அணில் ஏறவிட்ட நாய் போல் பார்க்காதே. இப்போது நீ எனக்குரியவன்.
அவன்: நான் சாப்பிடக்கூடாது என்பது சரி. மெனுக் கர்ட்டைக்கூடப் பார்க்கக்கூடாதா?

இடிக்கு மேல் பேரிடி
அவளிடம் இருந்து வந்த முதல் குறுந்தகவல்: என்னை மறந்து விடு எனக்கும் உனக்கும் இனிச் சரிவராது.
வந்த இரண்டாவது குறுந்தகவல்: முதல் தகவல் உனக்குரியதல்ல. தவறுதலாக உனக்கு அனுப்பிவிட்டேன்.

கணவன்: என்னை ஆத்திரப்படுத்தி என்னுள் இருக்கும் மிருகத்தைத் தட்டி எழுப்பாதே!
மனைவி: எலி ஒன்று எழும்பி என்னை என்ன செய்ய முடியும்.

பிட் அடித்தலின் உச்சம்: பிட்டை விடைத்தாளில் ஒட்டுதல்.

மருத்துவர்: தினமும் விளையாடுதல் மிகவும் நல்லது.
இளைஞன்: தினமும் கால்பந்து, துடுப்பாட்டம், டெனிஸ் விளையாடுகிறேன்.
மருத்துவர்: எவ்வளவு நேரம்?
இளைஞன்: மொபைலில் பாட்டரி தீரும் வரை.

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?
ஆண் முகவேட்டில் (Facebook)ஒரு பதிவு போடுவான் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அதைப் பிரதி செய்து ஒரு பெண் தனது முகவேட்டில் போட்டால்: 30 likes, 25 comments, 20 messages to inbox and 15 friend request கிடைக்கும்.

Wednesday 12 October 2011

இனி இந்திய பாக்கிஸ்தானியப் போட்டிக்கு நடுவில் ஆப்கானிஸ்த்தான் தவிக்குமா?

பிரித்தானிய ஆக்கிரமிப்பில் பலகாலம் ஆப்கானிஸ்த்தான் அகப்பட்டிருந்தது. பின்னர் சோவியத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அமெரிக்க கைக்கூலிகளுக்கும் சோவியத் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையில் நடந்த போரில் ஆப்கானிஸ்தான் மக்கள் அகப்பட்டுத் தவித்தனர். பின்னர் இசுலாமியத் தீவிரவாதிகளின் பிடியில் தவித்தனர். 2001இல் இருந்து அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடக்கும் போரில் ஆப்கானிஸ்த்தானிய மக்கள் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆப்கான் மக்களின் தவிப்பு கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பாக்கிஸ்தானும் ஹக்கானியும்
அடுத்ததாக ஆப்கானிஸ்த்தானிய மக்கள் இந்திய-பாக்கிஸ்த்தானியப் போட்டிக்குள் அகப்பட்டுத் தவிக்க இருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையில் பெரும் அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது. பாக்கிஸ்தானின் சில பிராந்தியங்களில் ஒரு அமெரிக்கத் தாக்குதலுக்கு எதிரான பல தயாரிப்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டும் இருந்தன. இந்த அமெரிக்க-பாக் முறுகலுக்கு வழிவகுத்தது ஓய்வு பெற்றுச் செல்லும் அமெரிக்காவின் உயர் படைத்துறை அதிகாரி மைகேல் முலென் தீவிரவாத அமைப்பான ஹக்கானி வலையமைப்பு பாக்கிஸ்த்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ (Inter-Services Intelligence) உடன் நெருங்கிய தொடர்புடையது என்று கூறியமையே.

தலிபான் மற்றும் அல் கெய்தாவிற்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு உதவிய பாக்கிஸ்த்தான் ஹக்கானிக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு மட்டும் முரண்டு பிடிப்பது ஏன்? 2001இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமிக்கும் முடிவை எடுக்க முன் அதற்கு நண்பனாக இணைத்துக் கொள்ள இரு தெரிவுகள் இருந்தன. அவை இந்தியாவும் பாக்கிஸ்த்தானும். அப்போது இந்தியப் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அமெரிக்காவிற்கு சகல உதவிகளும் வழங்க தாயாக இருந்தார். பெருந்தொகை இந்தியப் படைகளை அமெரிக்கப் படைகளுடன் இணைத்து ஆப்கானிஸ்த்தானில் செயற்படவும் தயாராக இருப்பதாகவும் அமெரிக்காவிற்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அமெரிக்கா ஆப்கான் படையெடுப்பில் பாக்கிஸ்த்தானை தனது தந்திரோபாய பங்களியாக இணைத்தது. ஆனால் இந்தியாவை முற்றாக ஒதுக்கி வைக்கவில்லை. ஆப்கானில் பல கட்டுமானப் பணிகளில் இந்தியாவையும் பங்கேற்க வைத்தது. பாக் ஆதரவு திவிரவாதிகள் ஆப்கானில் உள்ள இந்தியர்களுக்கு எதிராக கடத்தல், கொள்ளை, கொலை போன்றவற்றில் ஈடுபட்டனர். பாக்கிஸ்த்தான் தனது இந்திய எதிர்ப்புக் கொள்கைக்கு பல தீவிரவாத இயக்கங்களைப் பயன்படுத்தி வருகிறது. பாக்கிஸ்த்தானின் வெளியுறவுக் கொள்கையின் மையக் கருவாக இந்த தீவிரவாத அமைப்புக்களே இருக்கின்றன.

ஹக்கானி வலையமைப்பு
மௌலவி ஜலாலூதீன் ஹக்கானி 1980இல் ஆப்கானில் சோவியத் ஒன்றிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக மும்முரமாகப் போராடியவர். ஆப்க்கானில் தற்கொலைத் தாக்குதலை முதலில் அறிமுகம் செய்தவர். 1980களில் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயின் பெரும் சொத்தாகவும் செல்லப் பிள்ளையாகவும் இருந்தவர் மௌலவி ஜலாலூதீன் ஹக்கானி. இவர் வெள்ளை மாளிகையில் ரொனாட் ரீகனையும் சந்தித்தவர். ஆப்கானிஸ்த்தனில் இருந்து சோவித் ஒன்றியம் விரட்டியடிக்கப் பட்ட பின்னர் அமைக்கப்பட்ட ஆப்கான் முஜாகிதீன் அரசில் முதல் நீதி அமைச்சரும் இவரே. 2001இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்த பின்னர் ஹக்கானி வலையமைப்பு பாக்கிஸ்தானில் செயற்பட்டு வருகிறது. இதில் 12000பயிற்றப்பட்ட போராளிகள் இருக்கின்றனர். 2008இல் ஆப்கான் தலைநகர் காபுலில் இந்தியத் தூதுவரகத்தில் ஹக்கானி வலையமைப்பு தற்கொலைத் தாக்குதலை நடாத்தி 58பேரைக் கொன்று 141பேரைக் காயப்படுத்தியது. இத்தாக்குதலுக்கு பாக்கிஸ்த்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவியது என்று அமெரிக்காவும் இந்தியாவும் குற்றம் சுமத்தின.


ஹக்கானி வலையமைப்பும் பாக்கிஸ்த்தானும்
ஹக்கானி அமைப்பை இந்தியாவிற்கு எதிரான ஒரு ஆயுதமாக பாக்கிஸ்த்தான் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஹக்கானி அமைப்பிற்கு எதிரான பாக் அரசு ஏதாவது நடவடிக்கைகள் எடுத்தால் அது பாக்கிஸ்தானின் பல நகர்களில் தற்கொலைத் தாக்குதல்களாக வெடிக்கும் என் அஞ்சப்படுகிறது. 2014இல் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் அங்கு இந்திய ஆதிக்கம் நிலவலாம் என்று பாக்கிஸ்த்தான் அஞ்சுகிறது. ஆப்கானிஸ்த்தானின் தற்போதைய அரசு அமெரிக்காவிற்குப் பின்னர் இந்தியாவுடன் தனது உறவை பாக்கிஸ்த்தானுடன் வளர்ப்பதிலும் பார்க்க இந்தியாவுடன் வாளர்க்க விரும்புகிறது. பாக்கிஸ்த்தானில் ஒழுங்கான மக்களாட்சி இல்லை. சிறந்த பொருளாதார முன்னேற்றமும் இல்லை. இவை இரண்டும் உள்ள இந்தியாவை ஆப்க்கான் அரசு விரும்புகிறது. ஒக்டோபர் 5-ம் திகதி இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட ஆப்கான் அதிபர் ஹமீட் ஹர்ஜாய் இந்தியாவுடனான உறவைக் கட்டியெழுப்ப முயற்சித்தார். அத்துடன் அவர் பாக்கிஸ்த்தானையும் வார்த்தைகளால் சமாதானப் படுத்த முயற்ச்சித்தார். இந்தியாவை நண்பன் என்றும் பாக்கிஸ்த்தானை இரட்டைச் சகோதரன் என்றும் விபரித்தார். ஆப்கான் அதிபர் ஹமீட் ஹர்ஜாயின் இந்திய ஆதரவுப் போக்கை பாக்கிஸ்த்தான் விரும்பவில்லை. அவரை எப்படிப் பதவியில் இருந்து விரட்டுவது என்பதே பாக்கிஸ்த்தானின் பெரும் பிரச்சனை.இதற்க்கான பாக்கிஸ்த்தானிய ஆயுதமாக பாக்கிஸ்த்தானில் உள்ள இசுலாமிய தீவிரவாத அமைப்புக்களை பாக்கிஸ்த்தான் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஆதிக்கம்
2014இல் அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அங்கு இந்திய ஆதிக்கம் தலை தூக்கினால் பாக்கிஸ்த்தான் கிழக்கிலும் மேற்கிலும் இந்தியாவின் ஆதிக்கத்தைச் சமாளிக்க வேண்டிய ஆபத்தை எதிர் நோக்கும். பாக்கிஸ்த்தானின் பாலுச்சிஸ்தான் மாநிலத்தில் இந்தியா பிரிவினை வாதத்தை தூண்டலாம் எனவும் பாக் அஞ்சுகிறது. ஹமீட் ஹர்ஜாய் இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தில் ஆப்கானின் காவற்துறைக்கும் படையினருக்கும் இந்தியா பயிற்ச்சி அளிப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்ச்சியாளர்கள் என்ற போர்வையில் இந்தியப் படைகள் ஆப்கானில் நிலை கொள்ளலாம். ஆப்கானிற்கு இந்தியா 1.5பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான உதவிகளையும் வழங்கியுள்ளது. ஆப்கானின் கனிம வழங்களைச் சுரண்டும் உரிமையும் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 2014இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிய பின்னர் ஆப்கானின் கிழக்குப் பிராந்தியங்களில் இந்திய எதிர்ப்புக் கொள்கை கொண்ட  இசுலாமிய தீவிரவாத அமைப்புக்களான தலிபான் லக்சர் இ-தைபா போன்றவை வளர வாய்ப்பாக அமையும். 2009இல் ஆப்கானில் எடுத்த கருத்துக் கணிப்பில் ஆப்கான் மக்களிடை இந்தியா பிரபலம் பெற்றிருக்கக் காணப்பட்டது.

பாக்கிஸ்த்தானின் அச்சம்
ஆப்கானில் உள்ள சிந்து, கஷ்மீரி, பஞ்சாபி, பொல்டி போன்ற இனக் குழுமங்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இது ஆப்கானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு கலாச்சாரத் தொடர்பையும் ஏற்படுத்துகிறது. ஆப்கானில் இந்திய ஆதிக்க அச்சத்தை முன்னாள் பாக் அதிபர் பர்வஸ் முஸரஃப் அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்தியா ஒரு "பாக்கிஸ்த்தான்-எதிர்ப்பு-ஆப்கானை" உருவாக்க முயல்கிறது என்று அவர் தெரிவித்திருந்தார்.

இருக்கும் பிரச்சனை போதாது என்று சீனாவும் வரும்.
2014இற்குப் பின்னர் ஆப்கானில் இந்திய ஆதிக்கம் அதிகரிக்குமா என்ற அச்சமும் பாலுச்சிஸ்த்தானை இந்தியா பாக்கிஸ்த்தனில் இருந்து பிரிக்குமா என்ற அச்சமும் பாக்கிஸ்த்தானை சீனாவிடம் சரணடைய வைக்கும். சீனா பாலுச்சிஸ்த்தானுடாக ஈரானில் இருந்து எரிபொருள் விநியோகப் பாதை ஒன்றை அமைக்க முயல்கிறது. ஆப்கானின் இந்திய ஆதிக்கத்தை சமாளிக்க பாக்கிஸ்த்தானுக்கு ஹக்கானி அமைப்பும் சீனாவும் பெரிதும் தேவைப்படும்.

பிரித்தானியா போய், சோவியத் ஒன்றியம் போய், அமெரிக்கவும் நேட்டோவும் போய் பின்னர் இந்திய-பாக் போட்டிக்குள் ஆப் மக்கள் தவிப்பார்களா?

Tuesday 11 October 2011

மொழி பெயர்த்த நகைச்சுவை SMSகள்

முன் பின் தெரியாத ஒரு ஆண் உதவி கேட்டால் எந்தப் பெண்ணும் உதவி செய்ய மாட்டார்கள். முன்பின் தெரியாத பெண் உதவி கேட்டால் கூட ஆண்கள் தயங்காமல் உதவுவார்கள். ஆண்களே கருணை மிக்கவர்கள்.

தூங்கிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் வைத்திருந்த அறிவிப்புப் பலகை: "சில்லறை போட்டு அதன் சத்தத்தால் என் தூக்கத்தைக் கலைக்காதிர்கள். தாள்காசுகளைப்(நோட்டுக்களை) போடுங்கள்."

பாடசாலைக்கும் கல்லூரிக்கும் என்ன வித்தியாசம்?
பாடசாலைக்கு பிந்திப்போனால் பின்வாங்கில் இருக்க வேண்டும். கல்லுரிக்குப் பிந்திப் போனால் முன் வாங்கில் இருக்க வேண்டும்.

இன்றைய இளசுகளின் கொள்கை: பிறந்த நாளுக்குப் பரிசு தராத உறவினர்களுக்கு தேர்வு முடிவுகளைப்பற்றி அறியும் உரிமை இல்லை.

எமது உதடுகள் நண்பர்கள் போலே. STUDY, READ, WRITE என்ற சொற்களைச் சொல்லும் போது உதடுகள் சந்திக்க மாட்டாது.   PARTY, PICNIC, PLAY என்ற சொற்கள் சொல்லும் போது சந்திக்கும்.


மகள் iPhone, மகன்iPad, அன்னை iPod, தந்தை iPay.

விரிவுரையாளர்:  மாணவர்கள் தங்கள் கைக்கடிகாரங்களை அடிக்கடி பார்ப்பதைப் பொறுத்துக் கொள்ளலாம். அவங்க அது ஒழுங்காக வேலை செய்கிறதா என்று குலுக்கிப் பார்ப்பதைக் காணும் போதுதான் கோபம் பொத்திக் கொண்டு வரும்

ஏன் எமக்குப் பணம் வேண்டும்? எமக்குத் தேவையில்லாதவற்றை வாங்கி எமக்குப் பிடிக்காதவர்கள் எம்மைப் பார்த்து பொறாமைப்பட வைக்க.

சிறைக்கும் முகவேட்டிற்கும் (facebook)என்ன ஒற்றுமை. ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்து நேரத்தை வீணாக்கி சுவரில்(write on wall) எழுதுவது.

அதிகாலையில் ஆறு மணிக்கு விழித்து  பத்து நிமிடங்கள் கண்ணை மூடினால் நேரம் ஏழரையாகும். ஆனால் வகுப்பறையில் 9.30இற்கு ஒரு பத்து நிமிடங்கள் கண்ணை மூடினால் நேரம் 9.31ஆகும். என்ன கொடுமை இது.

Monday 10 October 2011

நகைச்சுவைக் கதை: மூளையில்லாமல் 802 இந்தியர்கள்


அது ஒரு பன்னாட்டு மருத்துவர்கள் மாநாடு. மருத்துவர்கள் தங்கள் நாட்டு மருத்துவச் சாதனைகளைப்பற்றி கூறிக் கொண்டிருந்தனர். பிரித்தானிய மருத்துவர் தமது நாட்டில் சிறு நீரகம் இல்லாமல் ஒருவரை நடக்கப்பண்ணி வாழவைத்ததைப் பெருமையாகச் சொன்னார். அமெரிக்கர் தமது நாட்டில் நுரையீரல் இல்லாமல் ஒருவரை நடக்கப்பண்ணி வாழவைத்ததைப் பெருமையாகச் சொன்னார்.


சீன மருத்துவர் தமது நாட்டில் இருதயமில்லாதவர்கள் நாட்டை நடத்துவ்தாகக் கூறிப் பெருமைப் பட்டுக்கொண்டார். இந்திய மருத்துவர் தமது நாட்டில் மூளையே இல்லாத 802பேர் ராஜ் சபாவிலும் லோக் சாபாவிலும் ஆயிரக்கணக்கானோர் சட்டசபைகளிலும் இருந்து நாட்டை நடத்துவதாகச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டார்.

Sunday 9 October 2011

Some selected SMS jokes


A girl asked her friend why are you wearing a wedding ring in the wrong finger? The other answered To show other that I was married to the wrong person.


Tcher: How old is your dad?
stud: As old as i am.
Tcher: How is it possible?
Stud: He became father only after i was born.

Things in Boys room b4 marrge Perfumes, Luv lettrs, Gifts, F'shp bands, Cards, Snaps After marriage- Painkillers, Loan papers Unpaid bills etc.

It's the sweetest thing to do. Do it the bed, on a sofa, in the bathroom or anywhere! U must never stop doing it. It's called Prayer! God blesesess ur d

A drunk man was strunlin 2 open door with key. Frnd askd - Can I help 2open the door? Drunk: dude just hold the house straight & i will open the door..


HEIGHT OF COURAGE: A senior student while ragging a junior "I will kiss ur wife on ur wedding" Junior answers "Thats ok sir....... but i will marry ur sister

Husband:u will never succeed in making that dog obey u. Wife:Nonsense it's only a matter of patience, I had a lot of trouble with u at first..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...