Monday 7 October 2013

"பயங்கரவாதிகளுக்கு" எதிராக அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தில் தாக்கியதில் சம்பந்தவட்டவராகக் கருதப்படும் அல் கெய்தா உறுப்பினரான அபு அனஸ் அல்-லிபி எனப் பிரபலமாக அறியப்பட்ட நஜிஹ் அல்-ரகாய் என்பவரை அமெரிக்கப் படையினர் லிபியத் தலைநகர் திரிப்போலிக்குள் அத்து மீறிப்புகுந்து கைப்பற்றிக் கடத்திச் சென்றுவிட்டனர். சோமாலியக் கடற்கரையிலும் அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதல் நடாத்தினர்.

 முகமூடி அணிந்த அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படையணியான நீரிலும் நிலத்திலும் வானிலும் தாக்குதல் நடத்தக் கூடிய சீல் பிரிவினர் லிபியத் தலைநகர் திரிப்போலி வீதியில் நடமாடிய அபு அனஸ் அல்-லிபியைக்  கடத்திச் சென்றனர்.

லிபியாவிற்குள் அரசுக்குத் தெரியாமல் அமெரிக்கப் படையினர் அத்துமீறிப் புகுந்து செய்த படை நடவடிக்கை லிபிய அரசை ஆத்திரப்படுத்தியுள்ளது. லிபியப் பிரதமர் அமெரிக்கா தனது நாட்டுக்குக் குடிமகனைக் கடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அமெரிக்காவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது. அரபு வசந்தம் முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாஃபியை கொன்ற பின்னர் லிபியாவில் பல படைக்கலன் ஏந்திய ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட குழுக்கள் லிபிவை பிரதேச ரீதியாகப் பிரித்து தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. அங்கு அல் கெய்தா தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. கடத்தப்பட்ட அபு அனஸ் அல்-லிபியின் மகன் லிபிய அரசின் ஆதரவுடனேயே அமெரிக்கப்படையினர் தனது தந்தையைக் கடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

அபு அனஸ் அல்-லிபி காலை 6-15அளவில் தனது வீட்டின் முன்னர் தனது Hyundai sports வண்டியை தரிப்பிடத்தில் நிறுத்திக் கொண்டிருக்கும் போது அவரது வண்டியை  முன்று திசைகளில் இருந்து வந்தஇலக்கத்தகடு இல்லாத நான்கு வண்டிகள் சூழ்ந்து கொண்டன. அவற்றில் இருந்து இறங்கிய பத்துப் பேர் அவரது வண்டியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அவரது துப்பாக்கியை முதலில் பறித்த முக மூடி அணிந்த கடத்தல்காரர்கள் பின்னர் அவரை இழுத்து தமது வண்டியில் ஏற்றிக் கொண்டு ஓடிவிட்டனர். அவர் இப்போது மத்திய தரைக்கடலில் உள்ள் அமெரிக்கக கடற்படைக் கப்பலான USS Antonioஇல் வைத்து விசாரிக்கப்படுகின்றார். இவர் நியூயோர் நகர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

லிபியாவில் கைது செய்யப்பட்டுக் கடத்தப்பட்ட அபு அனஸ் அல்-லிபியைப் பிடிக்க உதவுபவர்களுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானம் வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. அல் லிபி மெய்ப்பாதுகாவலர்களின்றி சுதந்திரமாக லிபியத் தலைநகர் திரிப்போலியில் நடமாடிக்கொண்டிருதது ஆச்சரியப்படவைக்கும் விடயமாகும்.

அமெரிக்க அரசு எல்லை கடந்து அத்து மீறிச் சென்று கைது செய்வது இது முதல்தடவை அல்ல 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அஹமட் அப்துல்கதிர் வர்சமெ என்னும் அல் ஷபாப் என்ற சோமாலிய இசுலாமிய தீவிரவாத அமைப்பு உறுப்பினரை ஏடன் வளைகுடாவில் வைத்துக் கைது செய்தது. பில் லாடனை பாக்கிஸ்த்தானிற்குள் அத்து மீறிச் சென்று கொன்றது.

2001 செப்டம்பர் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கப்பாராளமன்றமான காங்கிரசு  அமெரிக்கப்படைகள் தேவை ஏற்படின் மற்ற நாடுகளுக்குள் அத்து மீறிப்புகுந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுபவர்களைக் கைது செய்தல் கடத்துதல் கொல்லுதல் போன்றவற்றிற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அமெரிக்கப்படைகள் நைரோபி வெஸ்ற்கேட் கடைத்தொகுதியில் தாக்குதல் நடத்திய அல் ஷபாப்  எனப்படும் சோமாலியத் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் ஒரு ஈருடகத் தாக்குதல் தாக்குதல் நடாத்தியது. இதில் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேடிச்சென்ற அல் ஷபாப் தலைவர் அஹ்மட் கொடேன் அகப்படவில்லை எனத் தெரிவுக்கப்படுகிறது. இத்தாக்குதல் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்த படியால் இடை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவுக்கப்ப்டுகிறது. கடல் மூலம் சோமாலியக் கடற்கரை நகர் பராவேயில் தரையிறங்கிய சீல் படைப்பிரிவினர் பின்னர் தரை நகர்வு செய்தனர். இது அதிகாலை 2.30இற்கு அல் ஷபாப்பினர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது செய்யப்பட்டது. முதலில் ஒரு இரு மாடிக்கட்டிடத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தினர். முதலில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பின்னர் இரு பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டன என்கின்றனர் அந்த நகரவாசிகள். அமெரிக்கப் படையினர் சத்தமில்லாத துப்பாக்கிகள் பாவித்த படியால். அங்கு கடும் மோதல் நிகழ்ந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கப்படையினர் இதை எதிர்பாக்காததால் 15 நிமிடச் சண்டையின் பின்னர் அமெரிக்கத் தாக்குதல் அணி பின்வாங்கிச் சென்று விட்டது.அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் ஈருடகத் தாக்குதல் அதாவது கடல்வழி சென்று தரை இறங்கிச் செய்யும் தாக்குதலைப் போன்று கடினமான தாக்குதல் வேறு இல்லை என்றார். அல் ஷபாப் அமைப்பினர் தமக்குத் அமெரிக்க சீல் படையினரின் தாக்குதல் பற்றி முன் கூட்டியே தெரியும் என்று தெரிவித்துள்ளனர். தமது பலத்த பதில் தாக்குதலால் அமெரிக்கர்கள் பின்வாங்கிச் சென்றுள்ளனர் என்கின்றனர். அமெரிக்க தரப்பில் எந்த வித் ஆளணி இழப்பும் ஏற்படவில்லை எனச் சொல்லப்படுகின்றது.

உபாய மாற்றம்
இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிகம் ஆளில்லா விமானத் தாக்குதலை அண்மைக்காலங்களாக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயே செய்து வந்தது. இப்போது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் நேரடித் தாக்குதலை 2011இன் பின்னர் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் இரு வேறு விதமாகச் செய்துள்ளது.  அண்மைக்க் காலங்களாக சிஐஏயின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் கடுமையான் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது..

அமெரிக்காவின் தாக்குதல் பற்றிக் கருத்துத் தெரிவித்த அதன் அரசத்துறைச் செயலர் பயங்கரவாதிகள் ஓடலாம் ஆனால் ஒளிக்க முடியாது என்றார்.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...